×

காரைக்கால் அருகே மண்டபத்தூர் மீனவ கிராமத்தில் மாசிமக தீர்த்தவாரி

காரைக்கால், பிப்.18: காரைக்கால் அருகே மண்டபத்தூர் மீனவ கிராமத்தில் மாசிமக தீர்த்தவாரி கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.காரைக்கால் அருகே மண்டபத்தூர் மீனவ கிராமத்தில் மாசி மகத்தையொட்டி வருடம் தோறும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு நேற்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் அருகேயுள்ள மண்டபத்தூர், வரிச்சிக்குடி, மேலகாசாகுடி, பூவம், திருவேட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 11 கிராம கோயில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் மற்றும் சிவன் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. எல்லா பெருமாள் மற்றும் சிவன் தனித்தனி பல்லக்கில் இருந்தவாறு மதியம் 1 மணியளவில் வங்கக் கடலில் இறங்கி மூன்று முறை சுற்றி பக்தர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.

நேற்று மாலை நடைபெற்ற தீர்த்தவாரியில் காரைக்கால் மற்றும் அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பின் மாலை மண்டபத்தூரிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு சாமி வீதியுலா நடைபெற்றது. தீர்த்தவாரியில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். முன்னாள் எம்எல்ஏ., ஒமலிங்கம் தலைமையில் அனைத்து சாமிகளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. மாசிமக தீர்த்தவாரியில் காரைக்கால் மற்றும் அண்டை மாவட்ட பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வங்கக்கடலில் புனித நீராடினார்.தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு காரைக்கால் எஸ்பி., நிதின்கவுஹால் ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் மரியகிறிஸ்டின் பால் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Masimaka Tirthavari ,Mandapathur ,Karaikal ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...